Categories: சினிமா

பருத்திவீரன் விவகாரம் : ஞானவேல் ராஜா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகும் அமீர்?

Published by
பால முருகன்

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தது அந்த படத்தின் இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள். பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் பருத்திவீரன்  படத்தை ரிலீஸ் செய்த போது தான் படாதா பாடு பட்டதாகவும், எனக்கு எதிராக ஞானவேல் ராஜா மற்றும் அவருடைய தரப்பில் சிலர் இருந்ததாக கூறியிருந்தார்.

அவரை தொடர்ந்து அடுத்ததாக ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா ” அமீர் என்னை கணக்கு விஷயத்தில் ஏமாற்றி விட்டார் அவர் தான் எங்களுக்கு துரோகம் செய்தவர். அந்த சமயம் எனக்கு சினிமாவை பற்றி அந்த அளவிற்கு எதுவும் தெரியாது என்பதால் கணக்கு விஷயத்தில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்கவேண்டும் அவர் அப்படி சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” என கடுமையாக தாக்கி திருடன் என அமீரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இவர் இப்படி பேசியவுடன் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பொன்வண்ணன், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பல பிரபலங்களும் அமீருக்கு ஆதரவாக இறங்கி ஞானவேல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய கண்டனங்களை அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தனர்.

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் ஞானவேல் இறுதியாக தான் பேசியது அமீர் அண்ணனுக்கு வருத்தம் அடைய செய்திருந்தது என்றால் அதற்காக நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இருந்தாலும் அந்த அறிக்கைக்கு பதில் அறிக்கை வெளியீட்டு அமீர் எதையும் கூறவில்லை.

இதனையடுத்து தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், அமீர் இந்த விவகாரத்தில் மிகவும் மன வேதனையில் இருக்கிறாராம். ஏனென்றால், அனைவரும் பார்க்க கூடிய யூடியூபில் ஒரு சேனலின் பேட்டியின் போது திருடன்  என்று தன்னை ஞானவேல் ராஜா கூறியதால்  அமீர் மிகவும் வேதனையில் இருக்கிறாராம். தன்னுடைய மகன் கூட என் இப்படி உங்களை பற்றி சொல்கிறார் என்ற கேள்வியையும் தன்னிடம் கேட்பதாக சிவகுமாருக்கு அமீர் மெசேஜ் செய்தாராம்.

ஆனால், அதற்கு சிவகுமார் எந்த பதிலையும் கூறவில்லையாம். இதனையடுத்து அமீர் இந்த விவகாரத்தை சும்மாக விட கூடாது என்று இருக்கிறாராம். ஞானவேல் பேசியது மிகவும் காயப்படுத்தி இருப்பதன் காரணமாக ஞானவேல் மீது மானநஷ்ட வழக்கு தொடர திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தாலும் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் வருத்தம் தெரிவிப்பது எல்லாம் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. எந்த பேட்டியில் அவர் அப்படி பேசினாரா அதே போலவே அனைவருடைய முன்பு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

7 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

8 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

10 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

11 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

12 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

12 hours ago