பிரமாண்டமாக நடைபெறும் ‘கலைஞர் 100’ விழா! வருகை தருவாரா அஜித்குமார்?
நடிகர் அஜித்குமார் பொதுவாகவே தன்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவது வெற்றி விழா நடத்துவது என அதில் ஆர்வம் காட்டாத ஒருவர். அப்படியே தன்னுடைய படங்களுக்கு விழா நடந்தாலும் கூட அதில் கலந்துகொள்ளமாட்டார். தன்னுடைய படங்கள் மட்டுமின்றி விருது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என எதிலும் கலந்துகொள்ளமாட்டார்.
நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தாலும் அதனை ஒரு கட்டத்திற்கு மேல் அப்படியே நிறுத்திவிட்டார். கடைசியாக அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான அசல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கலந்துகொண்டிருந்தார். அதற்கு பிறகு எந்த இசைவெளியீட்டு விழாவிலும் அவர் கலந்துகொள்ளவே இல்லை. இதனாலே அவரிடம் தங்களுடயை நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்று அழைப்பதையும் திரையுலகினர் நிறுத்திவிட்டார்கள்.
இந்த நிலையில், சென்னையில் அடுத்த மாதம் பிரமாண்டமாக திமுகவினர் மற்றும் தமிழக அரசு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை நடந்துகிறாரகள். அந்த விழாவில் கலந்துகொள்ள பல பிரபலங்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோர் கலந்து கொள்ளவது உறுதியாகி இருக்கிறது.
ஏற்கனவே, நாசர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர்கள் கவுன்சில் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த முக்கியமானவர்கள் ரஜினி கமலை நேரில் சென்றே அழைப்பு கொடுத்தனர். ரஜினி, கமல் இருவருமே கலைஞருடன் நல்ல பழக்கத்தில் இருந்ததால் கண்டிப்பாகவே வருவார்கள் என கூறப்படுகிறது. ரஜினி, கமல் ஆகியோருக்கு அழைப்பு கொடுத்ததை போல நடிகர் சங்க உறுப்பினர்கள் அஜித்தையும் இந்த விழாவிற்கு வரவழைக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
இதற்கிடையில், அவரை சந்தித்து கலைஞர் 100 விழாவில் அஜித்திற்கு அழைப்பு கொடுக்க நடிகர்கள் சங்கம் முடிவெடுத்து இருக்கிறதாம். எனவே, பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த விழாவில் அஜித் வருவாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அஜித்தை போலவே நடிகர் விஜய்யையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க இருக்கிறார்களாம். எனவே, இருவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.