என்னங்க இது! இன்னும் எத்தனை பேரு தான் இருக்காங்க? கோட் படத்தில் இணைந்த த்ரிஷா!

trisha

GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இருப்பினும் படத்தில் அந்த பிரபலம் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் இந்த பிரபலம் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் விஜயகாந்த் AIமூலம் கொண்டு வரப்பட்டு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் படத்தில் வருவதாக தகவல்கள் பரவியது. அதனை தொடர்ந்து படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், தி கோட் படத்தில் நடிகை த்ரிஷாவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!

முக்கியமான கதாபாத்திரம் என்றால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு இல்லை. அதாவது முக்கியமான ஒரு கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படத்திலும் கூட விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா தான் நடித்து இருந்தார்.

READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

அந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து தி கோட் படத்திலும் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, இந்த தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி,  பார்வதி நாயர், மோகன், ஜெயராம்
அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ்
கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

Read more- மம்முட்டியை ஓரங்கட்டி ரூ.100 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்! மலையாளத்தில் புதிய சாதனை…

இவர்கள் எல்லாம் இருப்பதே படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ள நிலையில், தற்போது த்ரிஷாவும் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலை பார்த்த நெட்டிசன்கள் என்னங்க இது! இன்னும் எத்தனை பேரு தான் இருக்காங்க? என ஆச்சரியத்துடன் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்