ராக்கி பாய்க்கு ஜோடியாகும் சாய் பல்லவி! யாஷ்19 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் யாஷ். இந்த படத்தில் ராக்கி பாய் எனும் கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்திலே உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். கேஜிஎப் திரைப்படத்திற்கு முன்பு இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் எந்த படங்களும் வரவேற்பை கொடுக்கவில்லை.
கேஜிஎப் படத்தில் நடித்ததன் மூலம் தான் இவருடைய பெயர் வெளியே தெரிந்தது. கடைசியாக இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பை பெற்று 1200 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தினுடைய மூன்றாவது பாகமும் விரைவில் உருவாகவுள்ளது.
கேஜிஎப் 2 திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் அடுத்தாக யாருடைய இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தில் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த நிலையில், தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, நடிகர் யாஷ் அடுத்ததாக தேசிய விருது வென்ற பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன்னுடைய 19-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.
ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கணும்! அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை – கீர்த்தி சுரேஷ்!
அவருடைய 19-வது திரைப்படத்திற்கான தலைப்பு மற்றும் மற்ற விவரங்கள் வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி காலை 9.55 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பை கே.வி.என் என்கிற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மட்டும் தான் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் யார் என்பது என்ற அறிவிப்பும் வருகின்ற 8-ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் யாஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவியை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் கலக்கி வரும் சாய்பல்லவி யாஷ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்கள் உற்சாக படுத்தி இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025