சினிமாத்துறையில் நடிக்க நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் சூரி. இவர் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாகி நடித்து தனது வேறு பரிமாணத்தையும் காட்டினார் என்றே கூறலாம்.
அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து விடுதலை 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து இயக்குனர் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கருடன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சூரியுடன் உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, சசிவதா, ரோஷினி ஹரிப்ரியம், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், சுமா ராஜேந்திரன் & பரகிதா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கான டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்க சூரி வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படத்தில் நடிக்க சம்பளமாக சூரி 7 கோடி வரை வாங்கி இருக்கிறாராம்.
படத்தில் அவருடன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சசிகுமார் 2 கோடி தான் வாங்கி இருக்கிறாராம். சசிகுமாரை விட சூரி அதிகமாக சம்பளம் வாங்கி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கருடன் படத்தில் சசிகுமார் மற்றும் சூரி வாங்கிய சம்பளம் குறித்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…