நான் இப்போ ஹீரோ! சம்பளத்தில் சசிகுமாரை மிஞ்சிய சூரி?

soori sasikumar

சினிமாத்துறையில் நடிக்க நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் சூரி. இவர் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாகி நடித்து தனது வேறு பரிமாணத்தையும் காட்டினார் என்றே கூறலாம்.

READ MORE- அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்?

அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து விடுதலை 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து இயக்குனர் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கருடன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் சூரியுடன் உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, சசிவதா, ரோஷினி ஹரிப்ரியம், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், சுமா ராஜேந்திரன் & பரகிதா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கான டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்க சூரி வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படத்தில் நடிக்க சம்பளமாக சூரி 7 கோடி வரை வாங்கி இருக்கிறாராம்.

READ MORE-நம்பி ஏமாந்துட்டேன்! ‘வாழ்க்கை போச்சு’… நடிகை கிரண் வேதனை!

படத்தில் அவருடன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சசிகுமார் 2 கோடி தான் வாங்கி இருக்கிறாராம். சசிகுமாரை விட சூரி அதிகமாக சம்பளம் வாங்கி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கருடன் படத்தில் சசிகுமார் மற்றும் சூரி வாங்கிய சம்பளம் குறித்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்