padayappa [FIle Image]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய படங்களை இப்போது ரீ-ரிலீஸ் செய்வது தான். அப்படி பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மக்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டு வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்து வருகிறது. குறிப்பாக ‘கில்லி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘3’ உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
எனவே, இதன் காரணமாக பல தயாரிப்பாளர்களும். பல நடிகர்களும் தங்களுடைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான படையப்பா படத்தை டிஜிட்டல் மூலம் எடிட் செய்து ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
பிரபல தயாரிப்பாளரான தேனப்பன் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தாராம். இவர் தான் படையப்பா படத்தை தயாரித்து இருந்தவரும் கூட. இவர் படையப்பா சமயத்தில் ரஜினியை சந்தித்ததாம். படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தாராம். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தேனப்பனை பார்த்ததால் ரஜினிகாந்த் மிகவும் ஷாக் ஆகிவிட்டாராம்.
இந்த சந்திப்பின் போதுதான் தேனப்பன் ரஜினிகாந்திடம் சார் படையப்பா படத்தை ரீ -ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. கண்டிப்பாக இந்த நேரத்தில் நாம் ரீ-ரிலீஸ் செய்தால் படம் அமோக வரவேற்பை பெரும் என்று கூறினாராம். அதற்கு ரஜினிகாந்த் நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது என்று யோசிக்க தொடங்கி இருக்கிறாராம். தற்போது படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பேச்சுவார்த்தை முதற்கட்டத்தில் இருக்கிறது எனவும் இந்த தகவலை யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜி கணேசன், லட்சுமி, செந்தில், அப்பாஸ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான இந்த படையப்பா திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. அந்த சமயமே வசூலில் கலக்கிய இந்த படம் இப்போது ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…