இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் வாடிவாசல். இந்த திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் தாங்கள் கமிட் ஆகி இருக்கும் படங்களில் பிசியாக இருப்பதன் காரணமாக இந்த படம் தொடங்கப்படாமல் இருக்கிறது.
இருப்பினும் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே ஒட்டுமொத்தமாக இந்த வாடிவாசல் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி பரவி வருகிறது. அது என்னவென்றால், வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகி இருக்கிறாராம்.
ஓராண்டு நிறைவு செய்த டாடா! நடிகர் கவின் நெகிழ்ச்சி!
அவர் இந்த திரைப்படத்தில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக கலைப்புலி தாணு தனுஷை வைத்து எடுக்கலாம் என்று கூறியிருக்கிறாராம். எனவே, வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இதனை பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தகவல்களாக மட்மே வாடிவாசல் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக பரவி வருகிறது. இது வதந்தியான தகவல் என்றால் இது பற்றி விரைவில் படக்குழுவே விளக்கம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இயக்குனர் வெற்றி மாறன் விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு பிறகு அவர் விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…