கேப்டன் மில்லர் படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

captain miller

நடிகர் தனுஷ் தற்போது ராக்கி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியமான கதாபாத்திரத்திலும், தனுஷிற்கு ஜோடியாக நடிகை பிரிங்கா அருள் மோகனனும் நடித்திருக்கிறார்கள்.

நிவேதிதா சதீஷ், விநாயகன், சுந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நாசர், வினோத் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் எல்லாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

நடிகை ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் நிச்சயதார்த்தம்?

படத்தை பார்க்க மக்கள் பலரும் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் சம்பளமாக 15 கோடி வாங்கி இருக்கிறாராம்.

கேப்டன் மில்லர் படத்திற்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தது. இந்த படங்களில் நடிக்க தனுஷ் சம்பளமாக 12 கோடி வாங்கிய நிலையில், இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்தி கேப்டன் மில்லர் படத்திற்காக 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்