லைக்காவுக்கு செலவு இழுத்துவிட்ட ஷங்கர்! இந்தியன் 2 ஒரு பாட்டுக்கு இத்தனை கோடியா?

s shankar

Indian 2 தற்போது இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் வைத்து இந்தியன் 2 மற்றும் ராம் சரணை வைத்து கேம்செஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2  படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில்  பிரியா பவானி சங்கர், நெடுமாடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், மார்க் பென்னிங்டன், தீபா சங்கர், சித்தார்த், சாஜ் சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் இந்த தகவல் இருக்க இன்னொரு பக்கம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடியவில்லை பாடல் காட்சிகள் பாக்கி இருப்பதாக கூறி வருகிறார்கள்.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோருக்கு இடையே நடக்கும் காதல் காட்சி பாடலாக படமாக்க பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், மீண்டும் ஒரு பாடல் இப்போது எடுக்கப்படவுள்ளதாம். அந்த பாடல் தான் படத்தின் பிரமாண்ட பாடலாம்.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

வழக்கமாகவே ஷங்கர் எடுக்கும் படங்களை போலவே பாடல்களும் பிரமாண்டமாக இருக்கும். எனவே, இந்தியன் 2-வில் இப்போது எடுக்கப்படும் பாடல் கிட்டத்தட்ட 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாம். அதற்கான பிரமாண்ட செட் சென்னையில் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, லைக்கா நிறுவனம் கடைசியாக தயாரித்த லால் சலாம் படம் வசூல் ரீதியாக பெரிய தோல்வியை சந்தித்தது.

read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

எனவே, இந்த சூழலில் ஷங்கர் 30 கோடி பட்ஜெட்டில் ஒரு பாடல் எடுக்கவுள்ளதால் லைக்கா சற்று கடுப்பில் இருக்கிறதாம். இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியானது. விரைவில், இந்தியன் 2 படம் எப்போது வெளியாகும் என்பதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்