கவர்ச்சியை அள்ளி தெளித்தும் பட வாய்ப்புகளே இல்லை! வேதனையில் நடிகை வேதிகா!

தமிழ் சினிமாவில் மதராசி எனும் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் முனி, சக்கக்ரகட்டி, மழை மழை, காவியத்தலைவன், காஞ்சனா 3, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் இதனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவரை மக்களுக்கு மத்தியில் தெரிய படுத்திய படம் என்றால் முனி படம் தான்.
முனி படத்தில் அவ்வளவு அழகாகவும் கவர்ச்சியாகவும் நடித்திருப்பார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அருமையாக நடிக்க கூடிய இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு வரவில்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக காஞ்சனா 3 படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றே கூற வேண்டும்.
கிட்டத்தட்ட 4-ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு ஹிந்தி கன்னடம் ஆகிய சினிமாவிற்கு அவர் சென்று விட்டார். அங்கேயும் அவருக்கு பெரிய அளவில் பெரிய பெரிய படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகள் கிடைக்குமா என காத்திருக்கிறார். குறிப்பாக அடிக்கடி அவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதும் பட வாய்ப்புக்காக தான்.
எனவே, வித விதமாக கவர்ச்சி உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியீட்டாலும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என்ற காரணத்தினால் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம். எப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டாலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கூட நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க மாட்டிகிறதே என தன்னுடைய நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.
மேலும் நடிகை வேதிகா தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் வினோதன் எனும் திரைப்படத்திலும் ஜங்கிள் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனை தவிர கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025