நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்?

Anushka Shetty

சினிமா துறையில் கிசுகிசுக்கள் வருவது சஜகமான விஷயம் என்றே சொல்லலாம். இதில் நடிகைகளுடைய பெயர்கள் அடிக்கடி பெரிய அளவில் கிசு கிசுக்கப்படுவதற்கான காரணமே அவர்களுடைய திருமணம் பற்றி தான். சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் தங்களுடைய திருமணம் பற்றி பெரிய அளவில் கவனம் எடுத்துக்கொள்வது இல்லை.

இருப்பினும், நடிகைகள் பற்றிய திருமண செய்தி பஞ்சமே இல்லாமல் அடிக்கடி வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், நடிகை அனுஷ்காவின் பெயர் தற்போது இந்த திருமண கிசு கிசுவில் இடம்பெற்று இருக்கிறது. அனுஷ்காவின் பெயர் திருமண வதந்தியில் இடம்பெறுவது முதல் முறை அல்ல பலமுறை அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில், குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூட அனுஷ்கா நடிகர் பிரபாஸை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், அனுஷ்கா விரைவில் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளாராம். இதற்கான அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

நோய் வந்தாலும் நடிப்புக்காக சமந்தா எடுக்கும் ரிஸ்க்?

உண்மையில் அனுஷ்கா  திருமணம் செய்துகொள்ளவுள்ளாரா அல்லது இது வெறும் வதந்தியா என்பதனை அவரே விளக்கம் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முன்னதாக ஒரு பேட்டியில் தன்னுடைய திருமணம் பற்றி பேசிய அனுஷ்கா ” எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாதது என்று எல்லாம் இல்லை.

நான் திருமணத்தை எதிர்பவளும் அல்ல. கண்டிப்பாக அதற்கான சரியான நேரம் வரும் போது திருமணம் செய்துகொள்வேன். திருமணம் முடிவான பிறகு எல்லாருக்கும் அறிவித்துவிட்டு தான் திருமணம் செய்துகொள்வேன்” எனவும் நடிகை அனுஷ்கா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்