ரிலீஸ் தேதியை உறுதி செய்தது ‘தி அயர்ன் லேடி ‘ படக்குழு!! ஜெ பயோபிக்!!!
- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்பட்டு வருகிறது.
- இந்த படம் அடுத்த வருடம் (2020) பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாற்றை படமாக்க பலரும் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர். அதில் இயக்குனர் ஏ.எல்.விஜய், பாரதிராஜா, மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி என பலர் போட்டி போட்டு வருகின்றனர்.
இதில் பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு தொடங்க உள்ள நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த வருடம் (2020) பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU