பாடகர் யேசுதாஸ் மகன் வீட்டில் திருட்டு – 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை..!
சென்னையில் பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை திருடப்பட்ட புகாரில் இரு தனிப்படைகள் அமைப்பு
சென்னை : யேசுதாஸ் மகனும் பாடகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை போய் உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் உள்ளதாக சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா யேசுதாஸ் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது பணியாற்றுபவர்கள் திருடினார்களா? அல்லது முன்னாள் பணியாளர்களா என தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு தனிப்படைகள் அமைத்திருக்கும் காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிர படுத்தியுள்ளனர்.