அஜித்குமார் : சினிமாத்துறையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். அமராவதி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சினிமாவுக்கு வந்து 32-ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் ‘32YearsOfAjithKumar’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
அஜித் சினிமாவுக்கு வந்து 32-ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது. முதல் அப்டேட்டாக அவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள விடாமுயற்சி படத்திற்கான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டரில் அஜித் முகத்தில் ரத்தக்கறையுடன் இருக்கிறார். ’32 ஆண்டுகள் – தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்… யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி’ என்ற வாசகமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் ரெஜினா, த்ரிஷா, ஆரவ், அர்ஜுன், பிரியா பவானி சங்கர், சஞ்சய் தத், நிகில் சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…