தமிழகத்தில் திரையரங்குகளை இழுத்து மூட முடிவு.?

Published by
Dinasuvadu desk

கியூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனங்கள் திரைப்படங்களை திரையரங்குகளில் டிஜிட்டல் மற்றும் முப்பரிமான முறையில் ஒளிபரப்பு செய்ய அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கமும், டிஜிட்டல் நிறுவனங்களும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மார்ச் 1 முதல் புதிய படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்தது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில்
புதிய படங்கள் வெளியாகவில்லை. எனவே தமிழகத்தில் பல திரையரங்குகளில் 25% பார்வையாளர்கள் கூட இல்லாமல் ரிலீஸ் ஆன படங்களே மீண்டும் திரையிடப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று சென்னையில் திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தத்தை தொடரந்தால், திரையரங்குக்களை இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனனத்து திரையரங்குகளும் மூடப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இன்றைய டெக்னாலஜி உலகில் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குகளின் உதவி தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்களுக்கு விற்பனை செய்யவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Recent Posts

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

3 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

23 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

23 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

36 mins ago

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

1 hour ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

1 hour ago