ரஜினிக்கு 10 ரூபாய் பிச்சை போட்ட பெண்! இந்த கதை தெரியுமா?

Published by
பால முருகன்

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் என்றால் நம்மளுடைய மனதில் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் தான். அவருக்கு றிருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ரஜினிகாந்தும் சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை பல கஷ்டங்களை தாண்டி வந்து இருக்கிறார்.
9 வயதில் தனது தாயை இழந்த ரஜினிகாந்த் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, கூலி உட்பட பல வேலைகளை செய்தார், அதற்கு முன்பு பெங்களூரு போக்குவரத்து சேவையில் பேருந்து நடத்துனராக ரூ 500-க்கு வேலை கிடைத்தது.

பின்னர் நடிகர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் தமிழ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் ஹீரோவாக நடித்து படிபடியாக முன்னணி நடிகராக வளர்ந்தார். முன்னணி நடிகராக வளரும் சமயத்தில் ஒரு முறை ரஜினிக்கு பிச்சை எடுப்பதாகக நினைத்து ஒரு பெண் 10 ரூபாய் கொடுத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

சிவாஜி படத்தில் நடித்து முடித்த பிறகு ரஜினிகாந்த் ஒரு கோவிலுக்குச் செல்ல விரும்பினாராம். பிறகு அவர் நண்பருடன் கலந்து பேசும்போது உனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் நெரிசல் எதுவும் ஏற்படக்கூடாது  என்பது போல கூறினார்களாம். அதன்பிறகு மாறுவேடத்தில் செல்லலாம் என ரஜினிகாந்த் திட்டமிட்டாராம். கசங்கிய சட்டை மற்றும் எளிமையான லுங்கி அணிந்து, அடர்த்தியான பழுப்பு நிற சால்வையுடன் தலையை மூடிக்கொண்டு கோவிலுக்கு சென்றாராம்.

அப்போது குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் 10 ரூபாய் நோட்டைக் ரஜினிகாந்திடம் கொடுத்தாராம். ரஜினிகாந்த் மாறுவேடத்தில் இருந்த காரணத்தால் அந்த பெண்ணுக்கு அடையாளம் தெரியவில்லயாம். இருப்பினும், அந்த பெண் கொடுத்த பணத்தை ரஜினிகாந்த் வாங்கிக்கொண்டாராம். பிறகு கோவில் உண்டியலில் ரஜினிகாந்த் 100 ரூபாய் போட்டாராம். இதனை பார்த்த அந்த பெண் சற்று அதிர்ச்சியாகிவிட்டாராம்.

பின் அந்த பெண் தவறு செய்துவிட்டமே என்று யோசித்து வேகமாக சென்று ரஜினிகாந்திடம் மன்னிப்பு கேட்டாராம். இதற்கு ரஜினிகாந்த் மன்னிப்பெல்லாம் வேண்டாம் என்று கூறி அவர் கொடுத்த பணத்தையும் திரும்பி கொடுக்க மறுத்துவிட்டாராம். அந்த பெண்  ‘என்னை மன்னியுங்கள்… நான் உங்களை அடையாளம் காணவில்லை, யாரோ பிச்சைக்காரர் அமர்ந்திருப்பதாக நினைத்தேன்.

அதனால் தான் நான் பணத்தை கொடுத்தேன் என்று கூறினாராம். அப்போது ரஜினிகாந்த் சிரித்தபடி, ‘எது நடந்ததோ, அது சிறப்பாகவே நடந்தது. அகந்தையை என் மனதில் நுழைய விடக்கூடாது என்றும், என் கால்களை தரையில் பதிய வைப்பதற்காகவும் கடவுள் இப்படிச் செய்திருக்கலாம். ஏனென்றால் கடவுளுக்கு முன்னால் நாம் ஒன்றுமில்லை”என கூறினாராம். இந்த கதை கண் மருத்துவர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய நடிகரின் வாழ்க்கை வரலாற்றின், ‘தி நேம் இஸ் ரஜினிகாந்த்’ புத்தகத்தில் இடம்பெற்றது.

Published by
பால முருகன்

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

5 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

6 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

7 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

7 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

9 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

9 hours ago