தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனக்கென ரசிகர்களை பெற்று கொண்டார்.
கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியானது . தற்போது பிசாசு 2 , மற்றும் நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் பிசாசு 2 திரைப்படம் அணைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பொல்லாதவன் படத்துக்கு முன்னாடியே வெற்றிமாறன் தனக்காக ஒரு கதை கூறியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஆண்ட்ரியா கூறியது ” வெற்றிமாறன் பொல்லாதவன் படத்துக்கு முன்னாடியே என்னை சந்தித்தார். சந்தித்து பெண்கள் சம்மந்த பட்ட கதை ஒன்றை கூறினார். ஆனால் அப்போது எனக்கு நடிக்க விருப்பமில்லாததால் அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது.
அடுத்தாக ஆடுகளம் படத்தில் டப்பிங் பேசினேன். ஏனென்றால், படத்தில் நடித்த ஹீரோயின் டாப்ஸி ஆங்கிலோ இந்தியன். அடுத்தாக வடசென்னை படத்தில் நடிக்க வெற்றிமாறன் சார் என்னிடம் கேட்டார். நானும் நடிக்க சம்மதித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். வெற்றி சார் வேறமாதிரி இருந்தார். அவர் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர். வடசென்னை 2 படத்திற்காக காத்திருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…