கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் படைத்த சாதனை!
Whistle Podu : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் வெளியான 24 மணி நேரத்தில் பெரிய சாதனையை படைத்தது இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த பாடலை மதன் கார்க்கி எழுத விஜய் தனது குரலில் பாடி இருந்தார். இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில் அதாவது 1 நாளில் பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அது என்ன சாதனை என்றால் தென்னிந்திய சினிமாவில் வெளியான 1 நாளில் யூடியூபில் அதிகம் பார்வையாளர்களை கடந்த லீரிக்கள் பாடல் என்ற சாதனையை தான். விசில் போடு பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 24.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதைப்போல 1.2 மில்லியன் லைக்குகளையும் வாங்கி இருக்கிறது.
இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்று இருந்த அரபிகுத்து பாடல் வெளியான 1 நாளில் 24 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த பாடலின் சாதனையை கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் முறியடித்துள்ளது.
இந்த விசில் போடு பாடல் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் கூட இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில் மிகப்பெரிய சாதனையை படைத்தது இருக்கிறது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களை கடந்த தமிழ் பாடல்கள் (South India’s most viewed lyrical video songs)
- விசில் போடு – 24.88 மில்லியன்
- அரபி குத்து – 24 மில்லியன்
- டம்மசாலா- 17 மில்லியன்
- ரஞ்சிதமே – 16.68 மில்லியன்
- நா ரெடி தான் – 16.54 மில்லியன்