என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்தி தான்! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா!
நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பெட்ரோமாக்ஸ் திரைப்படம் வரும் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இவர் சிரஞ்சீவியின் சைரா ரெட்டி படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தான் மாப்பிள்ளை என்றும், விரைவில் இவருக்கு திருமணம் நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. ஆனால் சிலர் தேவையில்லாத வதந்திகளை கிளப்புகிறார்கள். திருமணம் செய்துகொள்ளும் மனநிலைக்கு நான் வரவில்லை. என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்திதான்’. என கூறியுள்ளார்.