Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும் தெரியும். அதைப்போலவே, படப்பிடிப்பு தளங்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ அசந்து யாராவது தூங்கிக்கொண்டு இருந்தாலும் கூட அவர்களை எழுப்பாமல் அவர்களை தூங்கட்டும் என விட்டுவிடும் நல்ல மனம் கொண்டவர். ஒரு முறை கூட படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் தூங்கும் இடத்தில் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தாராம்.
விஜயகாந்த் வெளியே வேலையை முடித்துவிட்டு வந்து பார்க்கும்போது அவருடைய இடத்தில் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தாராம். பிறகு விஜயகாந்த் வந்ததை பார்த்த அங்கு இருந்த ஒருவர் வேகமாக அவரை எழுப்ப சென்ரறாராம். அதற்கு விஜயகாந்த் அவரை எதற்கு எழுப்புறீங்க அவர் நல்லா தூங்கட்டும் என்று கூறிவிட்டு அங்கு இருந்த மற்றோரு இடத்தில் மற்றவர்களுடன் தூங்கினாராம்.
அதைபோலவே, ஒரு முறை அதிகாலை 3 மணி அளவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் விஜயகாந்த் புலன் விசாரணை படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்தின் அலுவலகத்திற்கு சென்றார்களாம். அந்த சமயம் அலுவலகத்திற்கு காவலாக இருந்த வாட்ச்மேன் ரொம்பவே அசந்து பூட்டு போட்டு கதவுக்கு அந்த புறம் தூங்கிக்கொண்டு இருந்தாராம். சாவியும் அந்த வாட்ச் மேன் கிட்ட தான் இருந்ததாம்.
அந்த வாட்ச்மேனுக்கு கிட்டத்தட்ட 60 லிருந்து 65 வரை வயது இருக்குமாம். சாவியும் அவர்கிட்ட இருந்த காரணத்தால் எப்படி உள்ளே செல்ல என்று விஜயகாந்த் மற்றும் ஆர்.கே.செல்வமணி யோசித்துக்கொண்டு இருந்தார்களாம். கார் ட்ரைவர் ஹாரன் அடித்து அந்த வாட்ச் மேனை எழுப்ப போனாராம். உடனடியாக விஜயகாந்த் வேண்டாம் அவர் பாவம் அசந்து தூங்கிக்கொண்டு இருக்கிறார் என்று கூறினாராம்.
பிறகு விஜயகாந்த் ஆர்.கே.செல்வமணியை தூக்கி கதவுக்கு அந்த புறம் இறங்க வைத்துவிட்டு அவரும் கேட் ஏறி குதித்து அலுவலகத்திற்குள் சென்றாராம். பின் ஆர்.கே.செல்வமணி எதற்கு இப்படி கஷ்ட்டப்பட்டு ஏறி குதிச்சு போகணும் அவரை எழுப்பி இருக்கலாமே என்று கேட்டாராம். அதற்கு விஜயகாந்த் பாவம் அவருக்கு வயது ரொம்ப இருக்கும் இப்போது நாம் எழுப்பிவிட்டோம் என்றால் திரும்ப அவருக்கு தூக்கம் வராது என்று கூறினாராம். விஜயகாந்தின் மனிதாபிமானத்தை பார்த்து தான் வியந்து போனதாக ஆர்.கே. செல்வமணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…