ajith kumar [File Image]
நடிகர் அஜித் குமாரின் வீட்டின் ஒரு பகுதியை அரசு அதிகாரிகள் இடித்து தள்ளியது அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அனுஷ்கா, ஆத்விக் ஆகியோர் உடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் வசித்து வருகிறார்.
இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் நிலையில், அந்த சாலையில் உள்ள பல வீடுகளின் மதில் சுவர்கள் இடிக்கப்படுகின்றன. இப்பொது, அங்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளதால், காரில் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை
அரசு உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறையினர் இப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது நடிகர் அஜித்குமார் வசித்து வரும் வீட்டின் முன்புற வாயிலில் இருந்த கேட் மற்றும் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இடித்து தரைமட்டமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணிகள் முடிந்த பிறகு, நெடுஞ்சாலை துறை சார்பில் இடிக்கப்பட்ட சுவர்கள் மீண்டும் சீரமைத்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜீத் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது அஜர்பைஜானில் இருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அஜித், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், அர்ஜுன், ஆரவ் நபீஸ் மற்றும் பலர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…