பிக் பாஸ் 7 சீசன் நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக இருக்கும் சீசனை போல் இல்லாமல் இந்த முறை வீட்டை இரண்டாக பிரித்து ஸ்மால் பிக் பாஸ், பிக் பாஸ் என்று பிரித்துள்ளார்கள். அந்த ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் விதிகளை மீறியவர்கள் மற்றும் சரியாக விளையாடாதவர்கள் போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அதைப்போல வழக்கமாக இல்லாதது போல வீட்டிற்குள் இருக்கும் செட்களும் மிகவும் வித்தியாசமாகவும் புதிதாகவும் இருக்கிறது. இன்னும் வீட்டிற்குள் சண்டை எதுவும் ஏற்படாத காரணத்தால் வீடு மிகவும் அமைதியாக இருக்கிறது. இந்த நிலையில், அனைவரையும் கவரும் படி வீட்டிற்குள் இருக்கும் எழுத்தாளர் பவா செல்லத்துரை கதை ஒன்றை கூறியுள்ளார்.
அவர் கூறிய கதை ” ஒரு மிடில் க்ளாஸ் அம்மாவின் குடும்பம் ஒன்று டெல்லியில் வசித்து வருகிறதாம். அவருக்கு 3-ஆம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவர் இருக்கிறாராம். அவருடைய மகன் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது அவனுடைய டிப்பன் பாக்ஸை மறந்து வீட்டிலே வைத்துவிட்டு சென்றுவிடுவாராம். பிறகு அவருடைய அம்மா வேகமாக அதனை எடுத்துக்கொண்டு சாலையில் ஓடுவாராம்.
அவரை பார்த்து இவளை பார் திருமணம் முடிந்த பிறகு இப்படி ஓடி கொண்டு இருக்கிறாள் என கிண்டல் செய்வார்களாம். இதை பற்றியல்லாம் கவலை படாதா அந்த அம்மா தனது மகன் பேருந்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு முன்பே டிப்பன் பாக்ஸை கொடுத்துவிடுவாராம்.கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து செல்லும்போது பழைய விஷயங்களை நினைப்பாராம். ஏனென்றால், திருமணம் முடிவதற்கு முன்பு அந்த அம்மா பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி படிக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு வாங்குவாராம்.
அதனை நடந்துகொண்டே இப்போது நினைத்து கண்கலங்கினாராம். இவருடைய இந்த ஓட்டப்பந்தய கனவை திருமண வாழ்கை தடை செய்துவிட்ட காரணத்தால் தனது கணவர் மகன் ஆகியோருக்கு சமயல் செய்துகொடுத்துவிட்டு வாழ்க்கையை நடத்துகிறாராம். பிறகு தன்னுடைய மகனுக்கு டிப்பன் பாக் ஓடி கொண்டு கொடுக்கும்போது நமக்கு ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல சந்தோசமாக இருக்கிறது என சந்தோச பட்டுக்கொள்வாராம்.
இப்படி தினமும் தன்னுடைய மகனிடம் டிப்பன் பாக்ஸை மறந்து வைத்துவிட்டு செல் அம்மா உனக்காக எடுத்துக்கொண்டு ஓடி வந்து தருகிறேன் என்று கூறுவாராம். இந்த கதையின் பெயர் ஓட்டம் எனவும் இந்த கதையின் மூலம் தான் சொல்ல வருவது “குடும்பம் என்னும் அன்பின் வன்முறை குடும்பத்துக்குள்ளேயே அடக்கிவிட கூடாது” என பவா செல்லத்துரை கூறியுள்ளார். இவருடைய இந்த கதையை கேட்ட அனைவரும் சற்று எமோஷனலாகியுள்ளனர்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…