விடுதலை 2 படத்தில் கேமியோவில் மிரட்ட வரும் வில்லன் நடிகர்! யார் தெரியுமா?

சென்னை: வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 2’ படக்குழுவில் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல்.
இயக்குனர் வெற்றிமாறனின் நீண்ட கால இயக்கத்தில் இருந்து வரும் ‘விடுதலை பாகம் 2’ படத்தின் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தில் மேலும் முக்கிய நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், ‘விடுதலைப் பாகம் 1’ திரைக்கு வந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இதனை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
தற்போது தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதை தொடர்ந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் அதற்கிணையாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.
ஆம், அதன்படி தென்காசியில் நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியும், எஸ்.ஜே.சூர்யாவும் காணப்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. இது கேமியோ ரோலாக இருக்கும் என்றும், படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025