புதிய அவதாரம் எடுக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் வில்லன்!
நடிகர் டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகையாவார். இவர் வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், டேனியல் பாலாஜிக்கு இயக்குனராக ஆசை இருப்பதாக டேனியல் பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்காக இவர் கதை எழுதி வைத்திருப்பதாகவும், அதனை தனது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்தும் வருகிறாராம்.
இதனையடுத்து, இவர் விரைவில் புதிய கதை உருவாக்கத்தில், திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.