நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதால் விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போதுதான் தொடங்கும் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? என்பது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகத்துடன் இருக்கிறார்கள்.
அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் பைக்கில் சுற்றுலா செல்வதும் சைக்கிளில் குழந்தைகளுடன் சைக்கிளிங் செய்வதும் என தனிப்பட்ட காரணங்களுக்காக விட முயற்சி படத்திற்காக இன்னும் தேதி ஒதுக்கப்படாமல் இருக்கிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலானது.
இதற்கிடையில், விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகரான சஞ்சய்தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அஜித்திற்கு அவர் வில்லனாக நடித்தால் கண்டிப்பாக பார்ப்பதற்கே மிகவும் ஒரு மிரட்டலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .
ஆனால், ஏற்கனவே அப்டேட் வராமல் படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதால் விடாமுயற்சியில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கவுள்ள இந்த தகவலை பார்த்த அஜித் ரசிகர்களுக்கு கோபம் தான் அதிகமாக உள்ளது. ஏனென்றால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவில்லை இப்போது படத்திற்கு வில்லன் தான் குறைச்சல் என கூறி வருகிறார்கள்.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…