DanielBalaji : திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி தனது 48 வயதில் மாரடைப்பால் காலமானார் அன்னாரது நல்லடக்கம் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.
நேற்றைய தினமான மார்ச் – 29 ம் தேதி இரவு 1 மணி அளவில் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் தனது 48 வயதில் அகால மரணமடைந்தார். இதனால் ஒட்டு மொத்த தமிழ் திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. நடிகர்களும் பல பிரபலங்களும், நேரிலும் சமூகத்தளத்திலும் அவருக்கு அவருக்கு இறுதி மரியாதையை செய்து வந்தனர்.
மேலும், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கொண்டு வரப்பட்டு மாலை வரை வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் டேனியல் பாலாஜியின் உடல் நல்லபடியாக அவரது உறவினர்களாளல் தகனம் செய்யப்பட்டது.
அவர் உயிரோடு இருக்கும் போது வில்லனாக பல படங்களில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் தனது சொந்த செலவில் கோவில், இயலாதவர்களுக்கு பண உதவி, படிப்பு உதவி என சுற்றி உள்ள அனைவரையும் நல்ல படியாக பார்த்து கொண்டார். மேலும், இறந்த பிறகும் ஒரு மனிதனால் செய்ய கூடிய கடைசி உதவியாக இருக்கும் கண் தானமும் அவர் செய்துள்ளார்.
இப்படி பட்ட ஒரு நல்ல மனிதரும், நடிகரும் நம்மை விட்டு சென்றாலும் அவரது நல்ல செயல்களாலும், அவரது படங்களின் மூலமும் நம்மோடு எப்போதும் அவர் நீங்காது வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…