vijay Priyanka Chopra
பிரியங்கா சோப்ரா : தமிழன் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது பிரியங்கா சோப்ரா அழுததாக அவருடைய அம்மா மது சோப்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் “தமிழன்” படத்தில் நடித்ததன் மூலம் தான் சினிமா உலகிலே அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காமல் பாலிவுட் பக்கம் சென்று பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அங்கே செட்டில் ஆகியும் விட்டார் என்றே சொல்லலாம்.
ஆனால், தமிழன் படத்திலும், சினிமாவிலும் நடிக்க அந்த சமயம் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விருப்பமே இல்லயாம். படங்களில் நடிக்கமாட்டேன் என்று கதறி தனது அம்மாவிடம் அழுதாராம். இந்த தகவலை அவருடைய அம்மா மது சோப்ரா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய மது சோப்ரா ” உலக அழகி பட்டம் பெற்ற பிறகு பிரியங்கா சோப்ராவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அது தான் விஜய் நடித்த தமிழன் படம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது என்னால் முடியவே முடியாது எனக்கு நடிப்பில் எல்லாம் ஆர்வமே இல்லை அம்மா என்று என்னிடம் பிரியங்கா சோப்ரா கதறி அழுதாள்.
அப்போது, நான் பிரியங்காவிடம் சொன்ன விஷயம் “வாய்ப்பு என்பது எப்போதாவது தான் வரும் அந்த வாய்ப்புகளை தவறவிடாமல் அதனை பயன்படுத்தி கொள்” என்று கூறினேன். பிறகு விருப்பம் இல்லாமல் தமிழன் படத்தில் அவர் நடித்தார். படத்தில் நடன காட்சி வரும் போது கொஞ்சம் சிரமம் பட்டால் விஜய்யை பற்றி சொல்லவே வேண்டாம் அவர் ஒரு ஜெண்டில் மேன். அவருடன் நடனம் ஆட அப்போது பிரியங்கா சோப்ராவுக்கு வரவில்லை.
பிறகு நடன இயக்குனருடன் சேர்ந்து கொண்டு நன்றாக நடனமாட பயிற்சி எடுத்துக்கொண்டார். பின் அவருக்குள் சினிமா மீது ஆர்வம் அதிகமான காரணத்தால் அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்று அங்கு படங்களில் நடித்து நல்ல நடிகையாக நல்ல இடத்திற்கு சென்று இருக்கிறார்” எனவும் மது சோப்ரா கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…