“முடிச்சிவிட்டிங்க போங்க”…வசூலில் இறங்கும் வேட்டையன்! 11 நாட்களில் இவ்வளவு தானா?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி கூட வசூல் செய்யாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : குறி வச்ச இறை விழவேண்டும் என்கிற வசனத்துடன் வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. படம் கருத்து கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை டிரைலரை பார்க்கும்போதே தெரிந்தது. ஆனால், படம் வெளியான பிறகு திரைக்கதை சரியாக இல்லாதது தான் எதிர்பார்த்த அளவுக்குப் படம் வெற்றியைப் பெறவில்லை என்பது மக்கள் கருதத்தாக இருந்தது.
அது ஒரு பக்கம் இருந்தாலும், வெளியான சமயத்திலிருந்து இப்போது வரை கலவையான விமர்சனங்களைப் பெற்றுக்கொண்டு வந்தாலும், வசூல் ரீதியாக படத்தின் பட்ஜெட்டை தாண்டியே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தினுடைய பட்ஜெட் 160 கோடியிலிருந்து 180 கோடி வரை தான். இந்த தொகையை படம் வெளியான 4 நாட்களில் தாண்டியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதாவது, படம் வெளியான 4 நாட்களிலே உலகம் முழுவதும் 240 கோடி வசூல் செய்திருந்ததாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு வசூல் குறைவாகக் கிடைத்து வந்த காரணத்தால், வசூல் விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த சூழலில், சினிமா வட்டாரத்திலிருந்து படம் இதுவரை 11 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 280 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பல படங்கள் வெளியாவதால் வேட்டையன் படத்தை எடுத்துவிட்டு அந்த படங்களைத் திரையிட வாய்ப்பு உள்ளது. எனவே, இனிமேல் வேட்டையன் படத்தின் வசூல் 350 கோடிகளைக் கூட நெருங்குவது சிரமம் தான்.
எதிர்பார்த்த அளவுக்கு வேட்டையன் படம் வசூல் செய்யவில்லை என்பதால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்த படத்திற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் உலகம் முழுவதும் 455 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில் , அந்த வசூலை வேட்டையன் முறியடிப்பது சந்தேகம் தான்.