அதர்வா நடிக்கும் பிரமாண்ட புது படம்! இயக்குனர் யார் தெரியுமா?

atharvaa

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு கதையும் கொண்ட படமாக இருக்கும்.

இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பட்டத்து அரசன் திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக அதர்வா மூன்று திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து படத்திற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள்  மூலமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நடிகர் அதர்வா நடிக்க உள்ள புது படம் ஒன்றிற்கான புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.  அது என்னவென்றால் நடிகர் அதர்வா அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ்  உதவி இயக்குனராக பணியாற்றிய ஆகாஷ் என்பவருடைய  இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.

சம்பளத்தில் நயன்தாராவை மிஞ்சிய த்ரிஷா? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!

அந்த திரைப்படம் வித்தியாசமான கதைகளத்தை  வைத்து உருவாக்கப்பட்டு வருகிறதாம். படத்திற்கான பூஜையும் சமீபத்தில் சைலண்டாக நடந்து முடிந்து விட்டதாம். இந்த திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக குஷி கபூர் நடிக்கவுள்ளாராம். குஷி கபூர் வேறு யாரும் இல்லை பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகள் தான்.

அதர்வா நடிக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக குஷி கபூரை தான் நடிக்கவைக்க படக்குழு முடிவு செய்து இருக்கிறதாம். விரைவில் இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதர்வா நடித்துள்ள அட்ரஸ், தணல், அட்ரஸ், தணல், ஆகிய படங்களுக்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
Deputy CM Udhayanidhi stalin
Madurai Pvt Play school
Edappadi Palanisamy criticized TN CM MK Stalin
Pollachi
4 year old child died
TNGovt - mathiazhagan mla