ஜி.வி. பிரகாஷ் : தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டேன், விரைவில் வெளியாகவுள்ளது என மேலும் சில திரைப்படங்களின் அப்டேட்டுகளை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாரி வழங்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் மட்டுமின்றி படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார். கோலிவுட்டில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட அவர், சிறந்த பின்னணி இசையை வழங்குவதில் பிரபலமானவர் என்றே கூறலாம்.
தற்போது, நடிகர்கள் துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” மற்றும் சியான் விக்ரமின் “தங்கலான்” ஆகிய படங்களை தாண்டி மேலும் சில திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ரசிகர்கள் ஒவ்வொரு படத்தின் அப்டேட் பற்றி கேட்க, அந்த படங்களுக்கான முதல் சிங்கிள் மற்றும் பிற அப்டேட்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.
ஆம், இது குறித்து தனது பதிவில், “லக்கி பாஸ்கர் மற்றும் தங்கலான் முதல் பாடலுக்கான பணிகளை முடித்து தயாரிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு சிங்கிள்களும் சீக்கிரம் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘அமரன்’ படத்தின் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு தயாரிப்பாளரின் அனுமதிக்காக காத்திருக்கிறேன். இது போக, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் உள்ள 4 பாடல்களும் அருமையாக உள்ளன. இவை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கானதாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ பாடல்களும் முடிக்கப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. கிங்ஸ்டன் படமும் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் சிஜி பணிகள் நடந்து வருகிறது. சினிமா அனுபவத்தில் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்று கூறிஉள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…