நடிகர் ராகவா லாரன்சுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய திருநங்கைகள்!
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாது, சமூக அக்கறை கொண்டவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, சீமான் ஆதரவாளரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி என்பவர், ஊனமுற்ற குழந்தைகளை ஏளனமாக பேசியதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில்,இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வேப்பேரி, போராக் சாரியில் உள்ள அம்மன் கோவிலுக்கு முன்பாக ராகவா லாரன்சுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், திருநங்கைகள் என அனைவருக்கும் பல ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார் என்றும், உடனடியாக ராகவா லாரன்ஸ் அண்ணனிடம் சுரேஷ் காமாட்சி அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சீமான் அண்ணன் மீது நாங்கள் மிகப் பெரிய மரியாதை வைத்து இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
.