Rathnam Trailer : விஷால் நடித்துள்ள ரத்னம் படம் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனரான ஹரி கடைசியாக யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் ஹரி விஷாலை வைத்து ரத்னம் எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இருக்கிறார்.
படத்தில் விஷால் உடன் , சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
அதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலரில் நடிகர் விஷால் கெட்டவார்த்தை பேசுவது போல காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது. வழக்கமான ஹரி படங்களில் நடக்கும் சண்டைக்காட்சிகளும் இந்த படத்தில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைலரை வைத்து பார்க்கையில் பிரியா பவானி சங்கருக்காக விஷால் எதிரிகளை எதிர்கொண்டு அவரை காப்பாற்றுவது போல தெரிகிறது. டிரைலரை பார்த்த பலரும் ரத்னம் ட்ரெய்லர், ரொம்ப நாளைக்கு அப்றம் ஹரி சார் படத்துல சண்டைக்காட்சிகள் அதிகமாக இருக்கிறது. கதையும் நன்றாக இருக்கும் என நினைக்கிறன் படம் ஹிட் ஆகும் எனவும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இந்த ரத்னம் திரைப்படம் வரும் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…