வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய ‘வணங்கான்’ படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண் விஜய்யை வைத்து படத்தை இயக்க ஆரம்பித்தார். சூர்யா தான் படத்தை தயாரித்து வந்த நிலையில், படத்தில் இருந்து அவர் விலகியதை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை தயாரிக்க முடிவெடுத்து படத்தை தயாரித்து கொடுத்துள்ளார்.
படமும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் முழுவதுமாக முடிந்து ரிலீஸ் ஆக ரெடியாக இருக்கிறது. ரோஷினி பிரகாஷ், ரிதா, சமுத்திரக்கனி, மிஸ்கின், உள்ளிட்ட பல பிரபலங்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்னதாக படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துஇருந்த நிலையில், டிரைலர் இன்று வெளியாவதாக அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது. அதன்படி, தற்போது வணங்கான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ட்ரைலரில் வரும் காட்சிகள் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை கேட்பதற்கு நம்மளை மெய்சிலிர்க்க வைத்து இருக்கிறது. அத்துடன் வழக்கமான பாலா படம் போல சண்டைக்காட்சிகளும் வசனங்களும் இருப்பதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு எங்கயோ சென்று இருக்கிறது.
ட்ரைலர் விமர்சனம்
ட்ரைலரை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ட்ரைலர் சும்மா அதிருது எனவும், கண்டிப்பாக அருண் விஜய்க்கு இந்த படம் மிக்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையும் எனவும், பாலாவின் கம்பேக் இந்த படம் தான் எனவும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ரூ.60,440க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம்,…
கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த…
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…