வெளியானது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லர்!

Ayalaan Trailer

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை Phantom FX Studios நிறுவனம் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில், படத்திற்கான இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. தற்பொழுது, படத்தின் டிரெய்லர் வெளியீட்டு இன்று துபாயில் பிரமாண்டமாக  நடைபெற்றது,  ரெய்லர் துபாயின் பிரபல கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பப்பட உள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீடு.!

படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 8.07 மணிக்கு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதன்படி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முன்னதாக, படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. அதேபோல் டிரெய்லரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெள்ளித்திரைக்கு வர உள்ளது. மேலும், இப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ளது. மேலும், இந்த படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்