பிரம்மாண்ட எதிர்பார்ப்பு! ‘கல்கி’ படத்தின் டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
கல்கி 2898 AD : இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ‘கல்கி 2898 AD’. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, துர்கூர் சாலிமான், கமல்ஹாசன், திஷா பதானி, ராணா டக்குபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
படத்தினை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். படத்தினை 600 கோடி பட்ஜெட்டில் பிரியங்கா தத், சி. அஸ்வனி தத், ஸ்வப்னா தத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்த நிலையில், வரும் ஜூன் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
#KalkiTrailer On June 10th ????????
REBEL STORM LOADING in 5 Days???? #Prabhas pic.twitter.com/lHKDZ6UbOt— Prabhas FC (@PrabhasRaju) June 5, 2024