இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதைதொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து ‘லியோ’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதனால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறாத காரணத்தால் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தநிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என முன்னதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இதனையடுத்து , படக்குழுவின் அறிவிப்பின் படி படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. டிரைலரை கூட்டமாக ரசிக்கவேண்டும் என்பதற்காக பெரிய திரையரங்குகளில் டிரைலர் காட்சிப்படுத்தப்பட்டது. டிரைலரை ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியாக பார்த்து ரசித்தார்கள்.
டிரைலர் காண சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் குவிந்தனர். இந்நிலையில், ரோகினி திரையரங்கில் ‘லியோ’ படத்தின் டிரைலரை திரையிட்டப்போது ரசிகர்கள் அங்கு உள்ள இருக்கைகளை சேதப்படுத்தினர். ஏற்கனவே லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவில்லை என்ற காரணத்தால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.
எனவே, டிரைலர் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட காரணத்தால் பார்க்க செல்வதற்கு முன்பே செய்தியாளர்களிடம் இசை வெளியீட்டு விழா வைக்கலான இது தான் என்பது போல பேசிவிட்டு சென்றார்கள். மக்கள் கூட்டமும் ரோகினி திரையரங்கில் அதிகாக இருந்த காரணத்தால் இருக்கைகளை மிகவும் சேதப்படுத்தினார்கள்.
இதைப்போலவே, கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியானது. எனவே, இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் திரையரங்குகளில் கூட்டமாக கூடி மாற்றி மாற்றி பேனர்களை கிழித்தார்கள். இதனால் இரு ரசிகர்களுக்கிடையே மோதலும் ஏற்பட்டது. அதைப்போலவே படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கியபோது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ரோகினிதியேட்டரின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…