கேப்டன் மில்லர் டிரைலர் எப்போது வெளியீடு? அசத்தல் அப்டேட் இதோ!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக இளம் நாயகி ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார்.
கேப்டன் மில்லர், நிவேதிதா சதீஷ், சுந்தீப் கிஷன், வினோத் கிஷன், ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அந்த மாதிரி படத்தில் நடிக்க முடிவெடுத்த அனுஷ்கா?
இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து படத்திற்கான டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். அந்த வகையில், படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் நாளை (ஜனவரி 6) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025