வந்தான்..சுட்டான்..ரிப்பீட்டு! 2 ஆண்டுகளை நிறைவு செய்த ‘மாநாடு’ படத்தின் மொத்த கலெக்‌ஷன்!

Maanaadu

கடந்த 2021ல் நவம்பர் மாதம் இதே தேதியில் வெளியான நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் செய்தது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய டைம் லூப் திரைப்படம், சிம்பு கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது.

டைம் லூப் பாணியில் வெளியான இப்படத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்க, மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஞ்சேனா கீர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

திரைக்கதை சிறப்பாக இருந்ததால் ரசிகர்களை கவர்ந்து இந்தப் படம் சிம்புவுக்கு மிகப்பெரிய ரீ என்ட்ரி கொடுக்கும் படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். படத்தில் இடம்பெற்றுள்ள பிஜிஎம், சிம்புவின் நடிப்பு, முக்கியமாக போலீஸ் வேடத்தில் வரும்எஸ்.ஜே. சூர்யா பின்னி எடுத்துவிட்டார் என்றே சொல்லாம். அதிலும், அவர் சொல்லும் ஒரு  வசனம் “வந்தான்..சுட்டான்..ரிப்பீட்டு” மிப்பெரிய அளவில் பேசப்பட்டது.

மாநாடு திரைப்படம் வெளியாகி (நவம்பர் 23ம் தேதி) இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதற்கிடையில், கடந்த வருடம் ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலை அறிவிக்கும் வகையில், தனது X வலைதளத்தில், மாநாடு மொத்தம் ரூ.117 கோடி வசூலித்ததை உறுதிப்படுத்தினார்.

ஒரே படத்தில் இணையும் சிம்பு- தனுஷ்? ரொம்ப பயங்கரமான சர்ப்ரைஸா இருக்கே!

மாநாடு பாக்ஸ் ஆபிஸ்

ரூ.30 கோடியில் எடுக்கப்பட்டஇந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழ் நாட்டில் மட்டும் ரூ.14 கோடியை வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. இரண்டாவது நாளில், படம் தமிழ்நாட்டில் சுமார் ரூ.16 கோடி வசூலித்தது.

தனுஷ் நடிக்க மறுத்த அந்த பிளாக் பஸ்டர் படம்? சிம்பு நடித்து அதிரி புதிரி ஹிட்!

இவ்வாறு பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்ட இந்த திரைப்படம், தமிழ்நாடு ரூ.52.20 கோடி,கர்நாடகாவில் ரூ.3.80 கோடி, கேரளாவில் ரூ.1.75 கோடி, வெளிநாட்டில் ரூ.19.20 என உலக முழுவதும் ரூ.100 கோடி முதல் ரூ.117 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்