முக்கியச் செய்திகள்

புஷ்பா படத்தில் நடிக்க மறுத்த டாப் நடிகர்? தேசிய விருதை தட்டித்தூக்கிய அல்லு அர்ஜுன்!

Published by
பால முருகன்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அதைப்போல, படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு சிறந்த பாடல் பிரிவில் இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ள நிலையில், படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதையை முதலில் இயக்குனர் சுகுமார் நடிகர் அல்லு அர்ஜுனிடம் கூறவில்லையாம் முதல் முறையாக டாப் நடிகரான மகேஷ்  பாபுவிடம் தான் கூறினாராம். ஆனால், சில காரணங்களால் மகேஷ் பாபு படத்தில் நடிக்க மறுக்க இயக்குனர் சுகுமார் அடுத்தாக அல்லு அர்ஜுனிடம் கூறி படத்தை ஓகே செய்துவிட்டாராம்.

சுகுமார் புஷ்பா படத்தின் கதையை கூறிவிட்டு படத்தில் இருந்து மகேஷ் பாபு விலகிய பின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றையும் வெளியீட்டு இருந்தார். அந்த பழைய பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அதில் ” கிரியேட்டிவ் வேறுபாடுகளால் சுகுமாருடன் என்னுடைய படம் நடக்கவில்லை. அவருடைய புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி வாழ்த்துகள்.

படம் மிகவும் அருமையாக இருக்கும் கதை கேட்டவுடனே எனக்கு பிடித்திருந்தது. அந்த படத்தில் பணிபுரியும் ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன். சில காரணங்கள் என்னால் நடிக்கமுடியவில்லை” என பதிவிட்டு இருந்தார். நேற்று புஷ்பா படத்தில் நடித்தற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மகேஷ் பாபுவின் பழைய ட்வீட் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

39 minutes ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

44 minutes ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

54 minutes ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

2 hours ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

2 hours ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

3 hours ago