கமல்ஹாசன் நடிக்கும் 234 படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது!

KH234

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘KH234’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும். படத்திற்கான மற்ற வேலைகள் மட்டும் இப்போது ஆரம்பம் ஆகும்.

இந்தியன் 2 டீசர் வெளியாகிய சில நாட்களில், KH234 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால், உலக நாயகனின் ரசிகர்கள் பிரம்மாண்ட உற்சாகத்தில் உள்ளனர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இந்த திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல படம் கண்டிப்பாக தரமாக இருக்கும்.

சமீபத்தில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படவிருக்கும் நிலையில், படத்தின் பூஜை மற்றும் படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியீட்டு படக்குழு அறிவித்தது. மேலும், KH234 படத்தின் புது அப்டேட் வரும் நவம்பர் 7 கமலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால்! வெளியானது திருமண புகைப்படங்கள்…

இதற்கிடையில், கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள KH234 படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்