நடிகை வடிவுக்கரசியின் வீட்டில் திருட்டு
- நடிகை வடிவுக்கரசி கோலிவுட் சினிமாவில் உள்ள மூத்த நடிகைகளில் ஒருவர்.கடந்த 10-ஆம் தேதி அவரது வீட்டைப் பூட்டி விட்டு அவரது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
- நேற்று மீண்டும் அவர் வீட்டுக்குச் சென்ற போது பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
நடிகை வடிவுக்கரசி கோலிவுட் சினிமாவில் உள்ள மூத்த நடிகைகளில் ஒருவர்.இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலில் நடித்து வருகிறார்.
சென்னை தியாகராய நகரில் நடிகை வடிவுக்கரசி தற்போது வசித்து வருகிறார்.கடந்த 10-ஆம் தேதி அவரது வீட்டைப் பூட்டி விட்டு அவரது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.இதையடுத்து கடந்த 19-ஆம் தேதி இரவு வடிவுக்கரசியின் வீடு திறந்து கிடப்பதாகவும், விளக்குகள் எரிவதாகவும் காவலாளி வடிவுக்கரசிக்கு போன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
உடனே தனது வீட்டுக்குச் சென்ற வடிவுக்கரசி வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார்.நேற்று மீண்டும் அவர் வீட்டுக்குச் சென்ற போது பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.