தளபதி விஜய் படத்திற்காக களமிறங்கிய தெலுங்கு பவர் ஸ்டார்… அரங்கம் அதிர தெறிக்கும் அப்டேட்..!
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழில் ‘வாரிசு’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் இந்த படம் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார்.
இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான இரன்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விரைவில் டிரைலர் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான இசைவெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவுள்ளது.
இதையும் படியுங்களேன்- பதான் படத்தில் படு கவர்ச்சி…தீபிகா படுகோன் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இந்நிலையில், தெலுங்கில் வாரசுடு படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாம். அதில் தெலுங்கி சினிமாவின் முன்னணி நடிகரான பவான் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.