இயக்குனராக ஒரு பக்கம் கலக்கி வந்த இயக்குனர் அமீர் நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி கொண்டு வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருப்பார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் வழங்கும் மாயவலை படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார்.
இந்த மாயவலை திரைப்படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். படத்தில் இயக்குனர் அமீருடன் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை அமீர் தயாரித்து இருக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நான் பெற விரும்புவது யாசகம் அல்ல என்னுடைய உரிமையை! இயக்குனர் அமீர் அறிக்கை!
வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான டீசர் இன்று டிசம்பர் 9-ஆம் தேதி வெற்றிமாறன், சேரன், பொன்வண்ணன், கரு,பழனியப்பன், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் வெளியிடுவார்கள் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது.
டீசரில் அமீர் ராஜன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதைப்போல க்ரைம் த்ரில்லர் கொண்ட கதை அம்சத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்து இருக்கிறது. டீசர் நன்றாக இருப்பதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இயக்குனர் அமீர் கடைசியாக ஆதிபகவன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இறைவன் மிக்பெரியவன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். விரைவில் அந்த படங்களுக்கான அப்டேட்டும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…