‘கோட்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு 2 நாட்கள் அனுமதி கோரிய நிலையில், 1 நாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

the greatest of all time special show

சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோட்’ படம் நாளை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் 5,000 திரைகளிலும், தமிழகத்தில் மட்டும் 1,000 திரைகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிக்கெட் புக்கிங்கும் விறு விறுப்பாக நடைபெற்று பல இடங்களில் ஹவுஸ் புல் ஆகிவிட்டது.

இதற்கிடையில், கேரளா மற்றும் பெங்களுரில் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, கோட் படத்தின் இயக்குனர் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் 05.09.2024 மற்றும் 06.09.2024 ஆகிய தேதிகளில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கேட்டிருந்தார்கள்.

இந்த நிலையில், தமிழக அரசு, 05.09.2024 அன்று ஒரே ஒரு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. அதாவது, செப்டம்பர் 5-ஆம் தேதி மட்டும் அதிகபட்சம் 5 காட்சிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து திரையரங்குகளும் ஒரு சிறப்பு காட்சியை மட்டுமே திரையிட முடியும், தொடக்கக் காட்சி காலை 9.00 மணிக்குத் தொடங்கி, கடைசிக் காட்சி அதிகாலை 2.00 மணிக்கு முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக ரஜினிகாந்த், விஜய், அஜித், போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் இறங்கினால் அதிகாலை 1 மணி மற்றும் 5 மணி காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பது வழக்கம் தான்.

உதாரணமாக கடைசியாக, அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு படங்கள் வெளியான போது, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் லாரில் ஏறி நடனம் ஆடியபோது கீழே விழுந்து உயிரிழந்த காரணத்தால் அதற்கு அடுத்ததாக எந்த படத்துக்கும் அதிகாலை சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்