For my boy…லாரன்ஸ் இப்படியெல்லாம் நடிப்பாரா.? சூப்பர் ஸ்டாரை மிரள வைத்த அவரது சீடர் ‘சீசர்’.!

Jigarthanda Double X Team and Superstar

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து இயக்கி மீண்டும் அதே பெயரில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி திரையுலக பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு இயக்குனர்களான ஷங்கர், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல திரைப்பட தயாரிப்பாளர்களும், நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோரும் இப்படத்தை பாராட்டியுள்ளனர். அந்த வகையில், தற்பொழுது, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

பொதுவாக எந்த திரைப்படம் வெளியாகினாலும் ரஜினிகாந்த் பாராட்டுவது வழக்கம். அந்த வகையில், அறிக்கை வெளியிட்டு நேரில் வரவழைத்து பாரட்டுவார். இந்த முறை,தனது வெறித்தனமான ரசிகரான ராகவா லாரன்ஸை மனதளவில் உருகி பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் படக்குழுவை வர்ணித்து பாராட்டியுள்ளார். முன்னதாக, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் பேட்ட நடித்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினி இது குறித்து தனது வாழ்த்து குறிப்பில், ” ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். ‘லாரன்ஸால்’ இப்படியும் நடிக்க முடியுமா..? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது.

முதல் பாகத்தை மிஞ்சிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’! முதல் நாள் வசூல் இவ்வளவு வருமா?

S.J. சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை. குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார். கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது. ‘திலீப் சுப்ராயனின்’ சண்டை காட்சிகள் அபாரம். ‘சந்தோஷ் நாராயணன்’ வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இதுதான் சினிமா! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

படத்தில் மக்களை கைத்தட்டவும், பிரமிக்கவும், சிந்திக்கவும், அழவும் வைக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். உன்னை கண்டு பெருமைப்படுகிறேன் கார்த்திக் சுப்புராஜ்,என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழு என்று தனது வாழ்த்து குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, இயக்குனர் மற்றும் படக்குழு ரஜினியை நேரில் சந்தித்துள்ளனர். இது குறித்து தனது X தளபக்கத்தில், ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்திற்காக உங்கள் அன்பையும் பாராட்டுகளையும் பொழிந்ததற்கு மிக்க நன்றி தலைவா. உங்கள் ஒரு மணி நேர உரையாடல் எனக்கும் ஒட்டுமொத்த குழுவிற்கும் ஒரு நேர்மறையான உணர்வைக் கொடுத்தது சார் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்