‘லால் சலாம்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
அண்மையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்ததாக அவருடைய மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு செய்த நிலையில், படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலில் நடித்துள்ளாராம்.
தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படப்பிடிப்பை முடித்ததை மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், லால் சலாம் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “உன்னுடன் ஒரு திரைப்படம் தயாரிப்பது ஒரு அதிசயம் மற்றும் நீங்கள் ஒரு தூய மேஜிக் அப்பா” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லால் சலாம்’ படத்தின் மூலம் இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…