தல ,தளபதி நடிக்கும் படத்தின் கதை பக்கா மாஸ் பிரபல நடிகர் பேட்டி
கோலிவுட் சினிமா வட்டாரத்தில் மாஸ் ஹீரோக்களாக வலம் வருபவர் அஜித் மற்றும் விஜய்.
கோலிவுட் சினிமா வட்டாரத்தில் மாஸ் ஹீரோக்களாக வலம் வருபவர் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கு கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உடைய நடிகர்கள். இவர்களின் படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் இவர்களின் ரசிகர்கள் இவர்களுக்காக அடிக்கடி சண்டை போட்டு கொள்வதும் வழக்கம். இந்நிலையில் இவர்கள் இருவரின் ரசிகர்களும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு விஷயம் தலயும் ,தளபதியும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது. இது குறித்து ஒரு செய்தி காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதையடுத்து,ப்ரேம்ஜி அமரன் தற்போது அளித்த பேட்டியில், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தலயும்,தளபதியும் சேர்ந்து நடிப்பதற்கு எதுவாக ஒரு கதையை இயக்குனர் வெங்கட்பிரபு தயாரித்து வைத்துள்ளார் எனவும் அந்த கதை மிகவும் சிறப்பாக வேற லெவலில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் தற்போது மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.