தளபதி 66 படத்தின் கதை மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது- சரத்குமார்.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஷாம், சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்கும் சரத்குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ” தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். இந்த படத்தின் கதை இது மிக சக்தி வாய்ந்ததாக அமைந்துள்ளது. அனைத்து வகையான ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த திரைப்படம் கண்டிப்பாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாம். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025