நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காகம் மற்றும் கழுகு கதை ஒன்றை கூறியிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து, லியோ பட வெற்றி விழாவில் பேசிய விஜய், ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு என்று பேசியிருந்தார்.
தற்போது, காக்கா – கழுகு கதையால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று கூறிய லெஜண்ட் சரவணன், ரஜினி – விஜய்யை சீண்டியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகம் சென்னை கே.கே.நகரில் 2 கிரவுண்ட் பரப்பளவில் ரூ.6 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தொழிலதிபரும் நடிகருமான லெஜன்ட் சரவணன், அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்க தொகையினை வழங்கினார். பின்னர், விழா மேடையில் பேசிய அவர், இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருவர் மாற்றி ஒருவர் கதை சொல்வதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பெரிதினும் பெரிது கேள்…விஜய் சொன்ன குட்டி கதை! அரங்கமே அதிர்ந்த தருணம்
மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், “நாம் கடுமையாக உழைத்தால் தான் முன்னேற முடியும், மாற்றி மாற்றி கதை சொல்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை சினிமா நல்ல முறையில் இருக்கிறது. காக்கா – கழுகு கதைகள், யாருக்கும் எந்த பட்டமும் தேவையில்லை, அன்பால் இணைந்து செயல்படுவோம்” என்றார்.
இவ்ளோ கோவம்லாம் உடம்புக்கு நல்லதில்ல – ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்!
இந்நிலையில், லெஜண்ட் சரவணனின் இந்த கருத்து ரஜினி மற்றும் விஜயை சீண்டினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இவர் கூறிய இந்த கருத்து ரசிகர்கள் மட்டும் இல்லாமல், சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘காகம் மற்றும் கழுகு இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கழுகு கீழே இருக்கும் போது காகம் அதனை தொந்தரவு செய்யும் ஆனால், கழுகு பறக்கும் அளவிற்கு என்ன முயற்சி செய்தாலும் காகத்தால் பறக்கவே முடியாது என தெரிவித்திருந்தார்.
லியோ பட வெற்றி விழாவில் பேசிய விஜய், இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருவர் ஈட்டியோட சென்று யானைக்கு குறி வச்சாரு..ஆனால் இறுதியில் ஒன்னும் இல்லாம வந்தாரு.
இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர். பாரதியார் சொல்வது போல் பெரிதினும் பெரிது கேள், எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க என்று கூறி, பெரிய இலக்கை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…